search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முகமது அசாருதீன்"

    மே 30-ந்தேதி தொடங்கும் உலகக்கோப்பையை இந்தியா வெல்லாவிடில், நான் மிகவும் ஏமாற்றம் அடைவேன் என்று முகமது அசாருதீன் தெரிவித்துள்ளார்.
    இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் வருகிற 30-ந்தேதி தொடங்கும் உலகக்கோப்பை தொடர் ‘ரவுண்ட் ராபின்’ முறையில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் 10 அணிகளும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

    விராட் கோலி தலைமையிலான இந்திய அணி கோப்பையை வெல்ல அதிகமான வாய்ப்பு உள்ளதாக முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அசாருதீன் கூறுகையில் ‘‘நாம் உலகக்கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ளது. நாம் சிறந்த அணியை தேர்வு செய்துள்ளோம். ஆடுகளங்கள் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தால், நாம் கஷ்டப்படுவோம் என்று எல்லோரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.



    ஆனால், நம்முடைய பந்து வீச்சாளர்கள் கூட எதிரணியை எளிதில் அவுட்டாக்கி விடுவார்கள். நம்மிடம் உலகத்தரம் வாய்ந்த பந்து வீச்சாளர்கள் உள்ளனர். இந்தியா சிறந்த அணி. உலகக்கோப்பையை இந்தியா வெல்லவில்லை என்றால், நான் மிகவும் ஏமாற்றம் அடைவேன்’’ என்றார்.
    இந்திய அணி கேப்டன் எந்தவித காயமும் இல்லாமல் ‘ஃபிட்’ ஆக இருந்தால் 100 சதங்கள் அடிப்பார் என்று முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் தெரிவித்துள்ளார். #ViratKohli
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 2-வது ஒருநாள் போட்டி அடிலெய்டில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 298 ரன்கள் குவித்தது. பின்னர் 299 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது.

    இந்திய அணி கேப்டன் விராட் கோலி சிறப்பாக விளையாடி ஒருநாள் போட்டியில் தனது 39-வது சதத்தை பதிவு செய்தார். விராட் கோலி ‘ஃபிட்’ ஆக இருந்தால் 100 சதங்கள் அடிப்பார் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அசாருதீன் கூறுகையில் ‘‘விராட் கோலியை போன்று தொடர்ச்சியாக விளையாடுவது சில வீரர்களால் மட்டுமே முடியும். உடற்தகுதியோடு, எந்தவித காயமின்றி விராட் கோலியால் விளையாட முடியும் என்றால், அவரால் 100 சதங்கள் அடிக்க முடியும். தற்போது உலகில் உள்ள வீரர்களை விட அதிக அளவில் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடும் திறமையை விராட் கோலி பெற்றுள்ளார்.’’ என்றார்.
    ×